ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் மில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, குறித்த திரைப்படத்தின் ஆரம்ப விழா அண்மையில் தென்னிந்திய பிரபலங்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
ஈழத்தமிழ் மக்களுக்கு அப்பால் சர்வதேச ஊடக துறையிலும் ஐபிசி தமிழின் வெற்றி ஈடு செய்ய முடியாதது.
அந்த வகையில், தற்போது இலங்கையின் தமிழ் திரைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை பதிக்கும் வெற்றி ஓட்டத்தை ஐபிசி தமிழ் நிறுவனம் ஆரம்பித்து இலக்கு நோக்கி பயணிக்கிறது.
இந்த நிலையில், ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த முயற்சியை சிதைக்கும் வகையிலும் திசைதிருப்பும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் விசமிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பல தகவல்களை மில்லரின் படக்குழு பின்வரும் காணொளியில் வெளிப்படுத்துகின்றது,

