வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை எதிர்வரும் 28 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம்
வெலிகம பிரதேச சபையின் தலைவராக இருந்த லசந்த விக்ரமசேகர, கடந்த அக்டோபர் 22 ஆம் திகதி பிரதேச சபை தலைவர் அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், வெலிகம தலைவரின் கொலைக்கான காரணம் இதுவரை விசாரணைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. மேலும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

