இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்திய தனியார் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது.
இறுதி சுற்று
இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை – விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தகுதி பெற்றிருந்தார்.

தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவருக்கு இலங்கை வாழ். மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

