வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமார் 447,000 ஏக்கர் பரப்புடைய 05 ஏக்கரிலும் குறைந்த தென்னந்தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு பல்வேறு கடன்களுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய ஏற்றுமதி வளர்ச்சிக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தனி பொருளாதார மையம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலை வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள வியாபாரிகளுக்கு 15 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் விவசாய மேம்பாட்டுக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/vw-YjMOieiQ

