முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப்
பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு
வருகின்றார்கள்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதி மாவீரர் துயிலும்
இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் இன்றையதினம் (08)
ஈடுபட்டிருந்தனர்.
சிரமதான பணிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 11இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர்களின்
வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 27 இல் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று தமிழர்களின்
விடிவிற்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு வருகின்றார்கள்.
இந்தநிலையில், மணலாறு மாவீரர் துயிலும் இல்லம், களிக்காடு மாவீரர் துயிலும்
இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும்
இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் ஆ பகுதி மாவீரர்
துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர்
துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம், இரட்டைவாய்க்கால்,முள்ளிவாய்க்கால் போன்ற
மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.
















