கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட 14 புதிய செக் இன் கவுண்டர்கள் பரீட்சார்த்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி ஒரு மாத காலத்திற்குள் நிறுவப்பட்டுள்ளதென விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.
இது இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் முக்கிய தொழில்துறை கூட்டாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு சான்றாக இது உருவாக்கப்பட்டுள்ளதென விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளுக்கு சீரான வசதி
குளிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு சீரான விமான நிலைய செயல்பாடுகளையும், தொந்தரவு இல்லாத வசதியையும் உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் குறிப்பிடப்படுகின்றது.

