நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) உரையாற்ற முயற்சித்த போதும், அதனை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைய (12.11.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகளுக்கு மாறாக அவரின் முயற்சி அமைந்ததாகக் கூறி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவும், சபை முதல்வர் பிமல் ரத்நாயவும் அதனை நிறுத்தினர்.
இந்தநிலையில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/yOjZlvUogdg

