ஒரு தொழிலதிபர் இந்த நாட்டில் நுகரப்படும் அளவை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உப்பை இறக்குமதி செய்து சேமித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
தனது பகுதியில் உள்ள ஒரு உப்பு தொழிலதிபர் 75 ரூபாய்க்கு உப்பு இறக்குமதி செய்து 275 ரூபாய்க்கு விற்றதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு உதவிய ஒருவர்
அந்த தொழிலதிபர் அரசாங்கத்திற்கு உதவிய ஒருவர் என்றும், அவரது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

