பொரளை (Borella) – காசல் வீதி மகளிர் (போதனா) மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
10 ஆம் திகதி ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததை மருத்துவமனை
உறுதிப்படுத்தியுள்ளது.
பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம்
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என
மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தனந்தநாராயனா
தெரிவித்துள்ளார்.
பிரிப்பு அறுவை சிகிச்சை
இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ கிராம் எடையும்
கொண்டதாக இருந்தது, இருவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர்,
மேலும், மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
வைத்தியசாலைகளில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், அண்மைய வரலாற்றில் கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இதுவாகும்.

