முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்த குழுநிலை விவாதமானது இன்று (15) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இன்று காலை 09.00 முதல் 09.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 மணிவரையில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 10.00 முதல் 10.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

காலை 10.30 முதல் மாலை 6.00 மணி வரையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன் மாலை 6.00 முதல் 6.30 மணிவரையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவு திட்டம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வரையில் வரவு செலவு திட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/WZiPenaxnYs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.