சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்காவில் இருந்து மதீனாவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிப்பதுடன் பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
தீப்பிடித்து எரிந்த பேருந்து
விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், விபத்துக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்ததனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
Deeply shocked at the accident involving Indian nationals in Medinah, Saudi Arabia.
Our Embassy in Riyadh and Consulate in Jeddah are giving fullest support to Indian nationals and families affected by this accident.
Sincere condolences to the bereaved families. Pray for the…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 17, 2025
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியாவின் அரச தரப்பினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, உடல்களை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ உதவியை உறுதி செய்வதை உறுதி செய்யுமாறும் மத்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

