முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது …! அநுர அரசு அறிவிப்பு

உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு
இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025
நவம்பரிலும் அவ்வாறு தான். 

மாவீரர்களுக்கு நினைவிடம்

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது ...! அநுர அரசு அறிவிப்பு | Maaveerar Naal 2025 Npp Government Announcement

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை. 

அவர்களுக்கான நினைவுத்தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேயே வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியல் கொள்கை

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது ...! அநுர அரசு அறிவிப்பு | Maaveerar Naal 2025 Npp Government Announcement

நாங்கள் உங்கள் மீது முன்வைத்த விமர்சனக் கணைகளையே
எம்மை நோக்கி மீள செலுத்த வேண்டாம். புதிய ஆயுதம் என்பது என்னைவிட சிறந்த திட்டங்கள் அவசியம்
என்பதாகும்.

எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள்  வரவு- செலவுத் திட்டத்துக்குஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்
படுவோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும்
தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்