கண்டியிலிருந்து பதுளைக்கு இன்று காலை 11:30 மணியளவில் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஓஹியா தொடருந்து நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக தொடருந்து மார்க்கத்திலான
சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்று நடவடிக்கை
தொடருந்தின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை
இடையிலான பயணிகள் தொடருந்துகள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, தொடருந்து பாதை
சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு தொடருந்துகளின் பாதுகாப்பையும்
செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.



