புலம்பெயர்ந்த தமிழர்களின் வேண்டுகோளின் பேரிலேயே அரசாங்கம் இந்த சிலையை அகற்றியதாக சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிலை வைப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அவருடனான குழுவினர் நேற்று (19.11.2025) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விகாராதிபதியை பார்வையிட்டுள்ளனர்.
பின்னர் குறித்த விகாரை காணியையும் ஆராய்ந்த பின்னர் திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துக் கூறிய தயாரத்தின தேரர்,
தமிழர்களின் கோரிக்கை
“திருகோணமலை மாவட்டத்தை கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தருமாறு கேட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
புத்தர் சிலைளை வைக்கும் போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும் பல விடயங்கள் தொடர்பில் எம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. அவற்றை ஊடகங்களுக்கு கொடுக்க முடியாது. வெட்கி தலைகுனிய வேண்டிய விடயமாக உள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்,
திருகோணமலை கோட்டை பொலிஸார் தினமும் வந்த பல சிக்கல்களை தந்ததாக கூறியுள்ளார்.

புத்தர் சிலையை நிறுவதற்கு பல தடைகளை ஏற்படுத்தினர். யாரே ஒருவரின் அழுத்தத்திற்கு இதை பெரும் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். இது தொடர்பில் எங்களிடம் சாட்சியங்கள் மற்றும் காணொளிகள் இருக்கின்றன. நாங்கள் எந்த கட்சிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல.
மேலும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பவர்கள் அல்ல. அதனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

