ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஒழுக்கமாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அடுத்த ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமங்களுக்குக் குறைபாடுள்ள புள்ளிகள் முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி
குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வழிமுறை நாட்டில் வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

