யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு செம்பியன்பற்று தாளையடி பகுதியில்
நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று
மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் மருதங்கேணி காவல்துறையினரால் நேற்றிரவு
8:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த
நிலையில் மருதங்கேணி காவல்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு குடாரப்பு பகுதியில்
வைத்து குறித்த மண் கனரக வாகனத்தில் மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனத்தை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும்
நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மருதங்கேணி காவல் நிலைய தகவல்கள்
தெரிவிக்கின்றன.

செய்தி – லின்ரன்

