மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின்
போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) இரவு கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 2600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 27 வயது நபரும், 800 மில்லி
கிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் புலனாய்வுப்
பிரிவின் தகவலுக்கு அமைய போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை
மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

