திருகோணமலை-கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள உப்பளம் கனமழை காரணமாக
நீரில் மூழ்கியுள்ளது.
பலத்த மழையுடனான கால நிலை காரணமாக குறித்த உப்பளச் செய்கை
பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீரிலும் மூழ்கியுள்ளது.
இதனால் உப்பளச் செய்கையாளர்கள் மாரி மழை காலங்களில் உப்பளச் செய்கையில் ஈடுபட
முடியாத நிலை காணப்படுகிறது.
உப்பளச் செய்கை
அதிக வெப்ப நிலை மூலமே உப்பு உற்பத்தியை பெறக் கூடிய நிலை இங்கு
காணப்படுகிறது.

உப்புச் செய்கை உற்பத்தியை விருத்தி செய்வதன் ஊடாக அதிக வருமானங்களை ஈட்ட
முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் கால நிலையின் மாற்றம் ஏதோ ஒரு வகையில்
உப்புச் செய்கையாளர்களை பாதிக்கின்றது.
இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரமும்
பாதிக்கப்படுகின்றது.




