பச்சிலைப்பள்ளி
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் இன்றையதினம் (26.11.2025) காலை 9:30
மணியளவில் பளை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர்
உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த கௌரவிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள
வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர்
ஏற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து
கொண்டனர்.


செய்தி – எரிமலை
யாழில் கட்டப்பட்டுள்ள கொடிகள்
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். நகர் பகுதி எங்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் இன்று வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்தி – தீபன்
மட்டக்களப்பு
மாவீரர் நினைவேந்தல் நாள் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு
நகர், சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இன்று காலை இந்த கொடிகள் கட்டப்பட்டு
அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு
முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு
அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்தி – குமார்
குடத்தனை வடக்கு
மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று
காலை 9:00 மணியிலிருந்த 1:00 மணிவரை இடம்பெற்றது.

முன்னதாக, மாவீரர்களுக்கு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை மலரஞ்சலி
செலுத்தப்பட்ட பின்னர் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் 20 பேர்
குருதிக் கொடையளித்தனர்.


செய்தி – எரிமலை
வட்டக்கச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு வட்டாரத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர்
மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (26.11.2025) வட்டக்கச்சி சந்தையடி
பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாவீரர் மற்றும் அக்காலப் பகுதியில்
கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குமாக அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் வணக்க
நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டு தனது அஞ்சலியை செலுத்தினார்.


செய்தி – தேவந்தன்

