யாழில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (26) இந்த கைது இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு ஆண்களும் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒரு
பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மில்லிகிராம் மற்றும் கிராம் அளவில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில்
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

