நவம்பர் மாதம் வந்தால் போதும் சில புலம்பெயர் தமிழர்கள், மாவீரர்களை வைத்து பணம் வசூலிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டிற்குள் பிரச்சினை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில புலம்பெயர் அமைப்பினர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், மக்களை திசைதிருப்பி போராட்டங்களை முன்னெடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை அவர்கள் இல்லாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், லண்டனில் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு, மாவீரர் நாள் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி….!
https://www.youtube.com/embed/JMEzSElDvwQ

