புதிய இணைப்பு
வவுனியாவில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல் வேகமாக பாய்வதனால் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வவுனியா அல்லது தென் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரண்டு பக்கங்களும் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. பேரூந்துகளில் வந்த பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளிகியுள்ளனர்.
இதேவேளை ஏ9 வீதி போக்குவரத்தினை தடை செய்து தாண்டிக்குளம் மற்றும் பறநாட்டாங்கல் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிசார் வீதி தடை போட்டு அதற்கு அப்பால் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


செட்டிகுளம்


புதுக்குளம்


பூந்தோட்டம்


நடுப்பகுதியில் உடைந்த செட்டிகுளம் அணைக்கட்டு

முதலாம் இணைப்பு
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று (27) மு.ப. 8.30 மணி முதல் இன்று (28) அதிகாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில். அதன் அளவு 315 மி.மீ என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் வவுனியா, தாண்டிக்குளம் – கிடாச்சூரி வீதி தேவர்குளத்தின் நீர் வழிந்தோடுவதால் நீரில் மூழ்கியுள்ளது.
இப்பகுதியில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/CouEjZhaYWU

