முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

வடக்கின் தற்போதைய நிலை 

யாழ். குருநகர் 

  • சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு யாழ். குருநகர் பகுதியில் உள்ள இடைத்தங்கல்
    முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன்
    பார்வையிட்டார். 

கிளிநொச்சி கண்டாவளை

  • கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
    இம் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் களத்திலிருந்து செய்து வருகின்றார்.

நல்லூர் 

  • யாழ்ப்பாணம் நல்லூரிலும்,  நல்லூர் வீரமாகாளியம்மன் கோவில் அடியில் ஒரு வீட்டினுள் முழுமையான வெள்ளம் புகுந்துள்ளது.
  • குறித்த பிரதேசத்துக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம்

  • சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த
    7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
    பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
  • குறித்த சீரற்ற காலநிலையால் ஒரு உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு
    நபர்கள் காயமடைந்துள்ளனர்.
  • அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரணைமடு

  • இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இருப்பினும், பெருக்கெடுத்து ஓடும் கால்வாயின் வெள்ளத் தடுப்பணை உடைந்ததால், அந்தப் பகுதியில் அதிக ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு

  • முல்லைத்தீவு பரந்தன் வீதியூடாக பயணம் கண்டாவளைப்பகுதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இரண்டு பாலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் முல்லைத்தீவு நோக்கி பயணிக்க முடியாது எனவும் கடமையிலிருந்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனையிறவு 

  • A9 ஆனையிறவு உப்பளத்தை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலை 9.30 நிலவரப்படி, இரணைமடு உபரி நீர் வரத்து அதிகரித்தால் நீர் மட்டம் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளர். மேலும், சிறிய வாகனங்கள் உந்துருளிகளை தவிர்த்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
  • நேற்று நள்ளிரவு முதல் முல்லைத்தீவு மாவட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக தடைப்படுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரங்களும் செயலற்று போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் 

  • வட்டுவாகல் பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் A35 வீதி வட்டுவாகல் பாலத்துடன் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு

  • புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் பாதையும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
    அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர உதவிகளை பெறமுடியாது முல்லைத்தீவு மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் – யாழ்ப்பாணம் 

  • மன்னார் – யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
    பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை.

மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம்

  • நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
  • அதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

முருங்கன் பிரதான வீதி

  • அகத்திமுறிப்பு,முருங்கன் பிரதான வீதி.
    பொற்கேணி,வேப்பங்குளம் நீரில் மூல்கியது.

இரணைமடு குளம்

  • இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
    குளத்தை அண்டிய கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் செயலாளர் பிரிவுகளிலுள்ள ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியான், பனங்கண்டி, தட்டுவான்கொட்டி மற்றும் கனகராயன் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் நிலைமையை கவனத்தில்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

வட்டக்கச்சி கிளிநொச்சி

  • வட்டக்கச்சி கிளிநொச்சி பாதை
    மூடப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.