வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பில் அவசர உதவிக்கு அழைக்குமாறு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது அவற்றில் சிக்கியுள்ள செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் அல்லது தெரு விலங்குகளுக்கு கால்நடை உதவி வழங்க இலங்கை கால்நடை சங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை கால்நடை சங்கத்தின் தலைவர் சுகத் பிரேமச்சந்திர தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தகைய உதவி தேவைப்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தொலைபேசி எண் – 071 6000 666
வைத்தியர் – மலகா லசந்தா – 0714145242
வைத்தியர் – நிலுஷா – 0706103808

