முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களை சேர்ந்த 7513 அங்கத்தவர்கள் வெள்ள
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு,
வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுகளில் 130
குடும்பங்களைச் சேர்ந்த 390 அங்கத்தவர்கள் 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க
வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு
வருகின்றது.

தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் 

1580 குடும்பங்களை சேர்ந்த 4993 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்
வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு | Pm Regarding Disaster Situation Jaffna District

இதேவேளை 01வீடு முழுமையாக
சேதமடைந்துள்ளதுடன் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான்
வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல
படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு,
எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள்
தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுரீதியாக
அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிராம
சேவையாளரின், பிரதேச செயலாளரின்; உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பலாலி பொலிஸ் நிலையத்துக்குள் வெள்ள நீர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம்கள்
மற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன.

யாழ்.மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு | Pm Regarding Disaster Situation Jaffna District

அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர்
புகுந்துள்ளதால் பொலிசார் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ள நீரை அகற்ற முடியாத நிலை காணப்படுவதுடன் தொடர்ச்சியாக மழையும்
பெய்துவருவதால் பொலிசாரின் சேவைகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.