களனி பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

