முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2004 சுனாமியை விஞ்சிய பேரழிவு.. இலங்கையை உலுக்கும் டிட்வா புயல்!

இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டிட்வா (Ditwah) புயல் பதிவாகியுள்ளது.

2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000இற்கும் அதிகம். 

மேலும், குறித்த சுனாமி பேரழிவின் விளைவாக ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்தனர். 

இந்நிலையில், 2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவாக இந்த டிட்வா புயல் பதிவாகியுள்ளது. 

பாரியளவு சேதம் 

கடந்த காலங்களில் இலங்கையை தாக்கிய புயல்கள், தாழமுக்கங்கள் மற்றும் சூறாவளிகளை பொறுத்தவரையில் கிழக்கிலிருந்து மேற்கை நோக்கி அல்லது வடமேற்கை நோக்கியே நகர்ந்துள்ளன.

2004 சுனாமியை விஞ்சிய பேரழிவு.. இலங்கையை உலுக்கும் டிட்வா புயல்! | Ditwah Cyclone Sri Lanka Never Seen Red Alert

ஆனால், வரலாற்றில் முதல் முறையாக வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற ஓரு புயல், இலங்கையின் தெற்கினுடாக நாட்டிற்குள் பிரவேசித்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

இதுவே, இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான ஒரு வானிலை மாற்றம் ஏற்பட்டமை முதன் முறை என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை காலமும் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியிருந்த போதிலும் கூட 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியே இலங்கையில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்த ஒரு அனர்த்தமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த டிட்வா புயல், சுனாமிக்கு அடுத்ததாக உயிரிழப்புக்களையும் சுனாமியை விஞ்சிய பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான மழைவீழ்ச்சி 

அதேவேளை, இலங்கையில் இதுவரை இல்லாத அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த 27ஆம் திகதி மாத்தளை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 540.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

2004 சுனாமியை விஞ்சிய பேரழிவு.. இலங்கையை உலுக்கும் டிட்வா புயல்! | Ditwah Cyclone Sri Lanka Never Seen Red Alert

அதனை தொடர்ந்து கிளிநொச்சியில், 1897ஆம் அண்டிற்கு பிறகு கிளிநொச்சியில் மழை கடந்த 24 மணி நேரத்தில் புளியம் பொக்குணை பகுதியில் அதிகபட்சமாக 274 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

அதேவேளை, நாட்டில் ஒட்டுமொத்தமாக 2420 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது பொதுவாக இலங்கையின் ஈரவலயங்களில் ஒரு வருடத்தில் பதிவாகும் மழையின் அளவு.

இது கடந்த இரண்டு மூன்று நாட்களில் பதிவாகியுள்ளது வரலாற்றில் முதல் முறை.

இது உண்மையிலேயே இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள தீவிர பாதிப்பு நிலைகளை காட்டுகின்றன.

நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை 

அதேநேரம், இலங்கை வரலாற்றில் இல்லாத அளவு அதிகளவான மக்கள், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளமை மற்றும் காணாமல் போயுள்ளமையும் இந்த டிட்வா அனர்த்தத்தில் தான் என கணிக்கப்பட்டுள்ளது.

2004 சுனாமியை விஞ்சிய பேரழிவு.. இலங்கையை உலுக்கும் டிட்வா புயல்! | Ditwah Cyclone Sri Lanka Never Seen Red Alert

முன்னதாக, 2014 ஒக்டோபர் 29ஆம் திகதி அன்று காலை 7:30 மணிக்கு, பதுளையில் உள்ள கொஸ்லந்தவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காணாமல் போயினர்.

இதுவே இலங்கையில் பதிவான மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய மண்சரிவு என பதிவாகியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்கள் இதை விட அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட எந்தவொரு அனர்த்தமும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் மாத்திரமே ஏற்பட்டுள்ளன.

ஆனால், இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இலங்கை முழுவதும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் முறை என கணிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.