முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல்

Courtesy: Nayan

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிலையில்
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79
ஆயிரத்து 946 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை படிப்படியாக
குறைந்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில்
மொத்தமாக 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள்
குறித்த அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 87 முகாம்களில் 11 ஆயிரத்து 230 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து
505 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல் | Munnar Floods Affected People Details

தற்போது மன்னார் மாவட்டத்தில் இயல்பான
வானிலை காணப்பட்டாலும் மன்னார் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிய
ஆரம்பித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தை இணைக்கும் இரண்டு வீதிகளும் துண்டிக்கப்பட்டு ஏனைய
மாவட்டங்களுடன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் – யாழ் பிரதான வீதி (ஏ-32) மற்றும் மன்னார் -மதவாச்சி பிரதான வீதி ஆகிய
இரு வீதிகளும் தற்போது பயணம் செய்ய முடியாத நிலையில் வெள்ள நீர் தேங்கி
நிற்கின்றது.

மீட்கும் நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள அதிக அளவான குளங்கள் பெருக் கெடுத்துள்ளதன் காரணமாக
மல்வத்து ஓயா, பாலியாறு மற்றும் பறங்கியாறு போன்ற ஆறுகளில் இருந்து அதிக அளவில் நீர்
பெறுக்கெடுக்கின்றமையினாலும் பல கிராமங்கள் மூழ்கிய நிலையில் தொடர்புகள் இன்றி
காணப்படுகின்றது.

தனித்து விடப்பட்ட சுமார் 250 நபர்களை மீட்கும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேக்கம் தொங்குபாலம் பகுதியில் கடந்த இரு
தினங்களாக தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உலங்கு வானூர்தி உதவியுடன்
மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வெளியான தகவல் | Munnar Floods Affected People Details

மேலும் கூராய் பகுதியில் உள்ள குளம் பெருக்கெடுத்ததன் காரணமாக 40 நபர்கள்
மரங்களிலும் உயர்ந்த கட்டடங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் நீர் மட்டம்
குறைந்த நிலையில் அவர்கள் அப்பகுதியில் உள்ள மண் திட்டியில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதித்து
உள்ளது, அவர்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கைகள் கடற்படையூடாக
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.