மகாவலி ஆற்று பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நீர்ப்பாசனத்துறை கேட்டுக்கொள்கின்றது.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை பிரிவுகளை நீர்ப்பாசனத்துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.


