முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் மீட்பு நடவடிக்கையில் முப்படையினர் – பதிவான பாதிப்பு நிலவரம்

புதிய இணைப்பு

சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில்
மொத்தமாக 22232 குடும்பங்களை சேர்ந்த 72254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர்
பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மதியம் 12. 00மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17004
குடும்பங்களை சேர்ந்த 56479 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் மீட்பு நடவடிக்கையில் முப்படையினர் - பதிவான பாதிப்பு நிலவரம் | Damage Reported In Trincomalee District Due Storm

61பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 5228 குடும்பங்களை
சேர்ந்த 15775 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 519 குடும்பங்களை
சேர்ந்த 1844 நபர்களும், தம்பலகாமம் 448 குடும்பங்களை சேர்ந்த 1373
நபர்களும்,மொறவெவ 129 குடும்பங்களை சேர்ந்த 403 நபர்களும்,சேருவில 805
குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1745 குடும்பங்களை சேர்ந்த
5210 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா
4932 குடும்பங்களை சேர்ந்த 16339 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை
சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 391 குடும்பங்களை சேர்ந்த 1242
நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய்
286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள்
களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக
சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.

திருகோணமலையில் மீட்பு நடவடிக்கையில் முப்படையினர் - பதிவான பாதிப்பு நிலவரம் | Damage Reported In Trincomalee District Due Storm

முதலாம் இணைப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டிட்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில்
மொத்தமாக 18734 குடும்பங்களை சேர்ந்த 60458 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர்
பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.11.30 நேற்று (30) மாலை 05.00 மணி வரையான
தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 493 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 15896
குடும்பங்களை சேர்ந்த 52206 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் மீட்பு நடவடிக்கையில் முப்படையினர் - பதிவான பாதிப்பு நிலவரம் | Damage Reported In Trincomalee District Due Storm

பாதிப்பு நிலவரம்

34 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 2838
குடும்பங்களை சேர்ந்த 8252 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 518 குடும்பங்களை
சேர்ந்த 1839 நபர்களும், தம்பலகாமம் 448 குடும்பங்களை சேர்ந்த 1373
நபர்களும்,மொறவெவ 129 குடும்பங்களை சேர்ந்த 403 நபர்களும்,சேருவில 270
குடும்பங்களை சேர்ந்த 776 நபர்களும், வெருகல் 1485 குடும்பங்களை சேர்ந்த
4483 நபர்களும்,மூதூர் 4731 குடும்பங்களை சேர்ந்த 14419 நபர்களும்,கிண்ணியா
4903 குடும்பங்களை சேர்ந்த 16303 நபர்களும்,கோமரங்கடவல 242 குடும்பங்களை
சேர்ந்த 803 நபர்களும் , பதவிஸ்ரீபுர 391 குடும்பங்களை சேர்ந்த 1242
நபர்களும், குச்சவெளி 5339 குடும்பங்களை சேர்ந்த 17866 நபர்களும், கந்தளாய்
278 குடும்பங்களை சேர்ந்த 951 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உயர்வடைந்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள்
களமிறக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.