பேரிடர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு பொது சுகாதார ஆய்வாளருக்கு புதிய
ஜனநாயக முன்னணியுடன் இணைந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இரத்தினபுரியில் உள்ள ஹகமுவ பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு
குறித்த அரசியல்வாதி,சுகாதார அதிகாரியின் மீது ஆபாசமான வார்த்தைகளால்
திட்டியது மட்டுமல்லாமல், அவர் தனது கடமைகளை செய்யவிடாது தடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

