முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானாட்டானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு

மன்னார்  – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில்
சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி
வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு
வருகிறது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள
அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

தொடர்ச்சியாக அவர்கள் இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து
வருகின்றனர்.

சமைத்த உணவுகள்

மன்னார் மாவட்டத்தில் பொலிஸார், இராணுவம்,கடற்படை மற்றும்
விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு
வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம் பெயர முடியாத மக்களுக்கு
சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நானாட்டானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு | Complaints Affected People In Nanaton

எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள்
தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில்
கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து
பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (1) காலை முதல் மீண்டும் மழை பெய்ய
ஆரம்பித்துள்ளது. எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.