மின் தடைக் காரணமாக செயலிழந்த தொலைபேசி கோபுரங்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க பல்லேகட்டுவ மற்றும் எல்ல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இந்த நடவடிக்கைக்காக குறித்த அதிகாரிகள் மின்பிறப்பாக்கி மற்றும் டீசலுடன் பல்லேகட்டுவ பகுதியிலிருந்து நமுனுகுல மலையில் சென்றுக் கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை சிறிலங்கா காவல்துறையின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.
மத்திய மலைநாடு
மத்திய மலைநாட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு தொலைபேசி தொடர்பு அவசியமாகிவிட்டதாகவும், இந்த முயற்சி வெகு விரைவில் வெற்றியடையும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, பதுளைப் பகுதியைச் சுற்றி வசிப்பவர்களை தொலைபேசி இணைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

