வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் 10,000 ரூபா முதல் கட்ட நிதியாக வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி செயலாளர் ஜயசிங்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் அறிவிப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வீடுகள்
தொடர்ந்து பேசிய அவர்,
அரசாங்க சுற்றறிக்கையின் படி அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை சுத்தம் செய்து மீள குடியேறுவதற்கான தன்மையை ஏற்படுத்தி கொள்ளவதற்காகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.
வாடகை வீடுகளில் வசிப்போர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வசிப்போர் என அனைவருக்கும் எவ்வித தடங்களும் இன்றி இந்த நிதியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பாரிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ள பகுதிகளுக்கு வரும் நிவாரணக் குழு அதிகாரிகளுக்கு உங்களின் உத்துழைப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

