முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியுள்ள பாகிஸ்தான்.. வெளியாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கை இதுவரை இல்லாத ஒரு மோசமான பேரழிவை எதிர்நோக்கியுள்ளது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வெளிநாடுகளிடம் இருந்து உணவு பொருட்கள் உட்பட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. 

2024 என பொறிப்பு 

அந்தவகையில், தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை ஆதரவுடன், பாகிஸ்தான் இராணுவத்தின் 45 பேர் கொண்ட நகர்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் C-130 ரக விமானத்தில் இலங்கைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.

காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியுள்ள பாகிஸ்தான்.. வெளியாகும் அதிர்ச்சி புகைப்படங்கள் | Expired Relief Supply From Pakistan Flood Srilanka

இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் காலாவதியானவை என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில், குறித்த பொருட்களில் காலாவதி திகதி என 2024ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த புகைப்படங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவு எனவும் உள்ளது. 

கடுமையான கண்டனங்கள் 

இது உண்மையில் அதிர்ரச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியுள்ள பாகிஸ்தான்.. வெளியாகும் அதிர்ச்சி புகைப்படங்கள் | Expired Relief Supply From Pakistan Flood Srilanka

இலங்கை மக்கள் பல வருடங்களாக இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காலாவதியான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் அவமரியாதைக்குரியது என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனிதாபிமான உதவி என்பது உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே தவிர, அவர்களை ஆபத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல.

இலங்கையர்கள் உண்மையான நட்பைப் பாராட்டுகிறார்கள், ஆனால் காலாவதியான பொருட்களை அனுப்புவது நட்பு அல்ல, அது அலட்சியம் எனவும் பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர். 

எனவே, இது தொடர்பான அரசாங்கத்தின் ஒரு உறுதிபடுத்தல் இந்த திடீர் அச்சநிலைமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.