டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கம்பளையில் மட்டும் 1,000 பேர் இறந்ததாகக் கூறப்படுவதை கண்டி மாவட்டச் செயலாளர் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றின் போது, இறந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே கண்டி மாவட்டச் செயலாளர் இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.
கேள்வி எழுப்பிய சாணக்கியன்..
அதன்படி, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பேரிடர்களின் போது உயிரிழப்பு புள்ளிவிபரங்களில் முரண்பாடுகள் ஏற்படுவது பொதுவானது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், சேதமடைந்த வீதிகள் காரணமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான அணுகல் குறைவாக இருப்பதால், தொலைதூர கிராமங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்படுவது குறித்த தொடர்பிலும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, அவற்றுக்கான அணுகலை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

