முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திட்டமிட்ட கொலை முயற்சி: முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது!

திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் நேற்று (02.12.2025) கைது செய்யப்பட்டதாக மீட்டியாகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான கரந்தெனிய சுத்தா என்பவரின் வழிக்காட்டுதலின் கீழ், நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த “மட்டக்ககளப்பு ராஜா” எனப்படும் 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கையிருப்பு

கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து 14 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கொலை முயற்சி: முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது! | Former Ltte Member Was Arrested

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான கரந்தெனிய சுத்தா என்பவரின் வழிக்காட்டுதலின் கீழ், அடையாளம் தெரியாத நபரொருவரால், மோட்டார் சைக்கிள் மூலம் சந்தேகநகர் மீட்டியாகொட பிரதேசத்துக்கு வருகைத் தந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்டியாகொட , டொமீ ஜயவர்தன மாவத்தை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருக்கும் சந்தர்ப்பத்தில் மீட்டியாகொட காவல்துறை அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.