கிண்ணியா- உப்பாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்ட சுமார்
60 எருமை மாடுகள் இன்று(3) பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினரின்
கடுமையான போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டன.
கிண்ணியா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஆற்றில் அபாயகரமான
அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய சுமார் 60
எருமை மாடுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
60 எருமை மாடுகள்
பொதுமக்களின் சாமர்த்தியம்
ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மாடுகள், உப்பாறு பாலத்தைக் கடந்து கடலை
நோக்கிச் செல்லும் அபாயகரமான நிலையில் இருந்தன.

இதைக் கண்ட பொதுமக்கள்,
உடனடியாக உப்பாறு பாலத்தின் மீது கூடினர்.
மாடுகள் கடலுக்குள் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் அனைவரும் சத்தம்
எழுப்பியும், பல்வேறு முயற்சிகள் மூலமும் மாடுகளைக் கலைக்க முற்பட்டனர்.
இருப்பினும், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் மாடுகள் தொடர்ந்து கடலை
நோக்கி இழுத்துச் செல்லப்பட்டன.
மீட்புப் பணி
படகு மூலம் வீர சாகச மாடுகள் கடலில் மூழ்கி உயிரிழப்பதற்குச் சொற்ப நேரமே இருந்த நிலையில்,
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உடனடியாகப் படகுகளைக் கொண்டு வந்து மீட்புப்
பணியைத் துரிதப்படுத்தினர்.

வெள்ளத்தின் கடும் நீரோட்டத்துக்கு மத்தியில், படகுகள் மூலம் மாடுகளை,
மிகுந்த பிரயத்தனத்துடன் ஆற்றின் கரையோரத்திற்குக் கொண்டு சேர்த்தனர்.
பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினரின் உயிர் பற்றிக் கவலைப்படாத துணிச்சலான
முயற்சியால் 60எருமை மாடுகளும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன.




