அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் வழமையான முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் அனைத்து வழிகளிலும் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.
இலவச பயணம்
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிப்புற வீதி , கட்டுநாயக்க கொழும்பு வீதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயணிக்கும் வாகனங்களுக்கு நிலவும் பாதகமான வானிலை குறையும் வரை இலவச பயணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வசதி நேற்று (03.12.2025) நள்ளிரவு 12 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

