அண்மைய அனர்த்தங்களை தொடர்ந்து, இலங்கையின் நெடுஞ்சாலை வலையமைப்புக்கு சுமார்
ரூ. 190 பில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் வெள்ளம், மண்சரிவுகளை
தூண்டியது.
இதனால் நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டதுடன்
இதில் சுமார் 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை வலையமைப்புக்கான சேதம்
அத்துடன், நெடுஞ்சாலை வலையமைப்புக்கான சேதத்தின் அண்ணளவான மதிப்பீடு தற்போது ரூ.
190 பில்லியன் ஆக இருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்
விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிவேக நெடுஞ்சாலைகளில் இம்முறை பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை
என்றும் அவர் கூறியுள்ளார்.

