ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹமட் தாஹிர் சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று வெள்ளிக்கிழமை (05) காலை அவர் பதவியேற்றுள்ளார்.
வெற்றிடமான பதவி
இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹமட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.


