மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக, தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (05) காலை 6.30 வரையான நிலவரப்படி நாட்டின் ஏனைய ஆறுகளின் நீர் மட்டம் சாதாரண நிலையில் இருப்பதாகக் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடைசி 21 மணிநேர காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சி குறித்த தகவல்களையும் நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது
இதன்படி பனதுகம (Panadugama) பகுதியில் 120.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் உரவ (Urawa) பகுதியில் 67.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், எல்லகவ (Ellagawa) பகுதியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

