முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தாயிற்காக வீடு கட்ட வைத்திருந்த மில்லியன் கணக்கான நிதியை நாட்டுக்காக முழுமையாக கொடுத்த இளைஞன்

தன்னுடைய தாயிற்காக வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த 20 இலட்சம் ரூபா பணத்தினை, இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம் திட்டத்திற்காக இலங்கையரொருவர் நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இலங்கையில்  தற்போது வரையில் 486 பேர் உயிரிழந்துள்ளதுடன் 341 பேர் காணாமல் போயுள்ளனர். 

இது எமது கடமை…

மேலும், பெருமளவான உடமைகள் அழிந்து இலட்சக்கணக்கானோர் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  பேரழிவில் சீர்குலைந்து போன நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் இலங்கையர்கள், நலன் விரும்பிகளால் நன்கொடைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தாயிற்காக வீடு கட்ட வைத்திருந்த மில்லியன் கணக்கான நிதியை நாட்டுக்காக முழுமையாக கொடுத்த இளைஞன் | Re Build Sri Lanka

இதன்படி, இலங்கையைச் சேரந்த ஜனாதிபதி விருது பெற்ற வணி முயற்சியாளர் ஒருவர் தன்னுடைய தாயாருக்காக வீடு ஒன்று கட்டும் நோக்கில்  சேமித்து  வைத்த 20 இலட்சம் ரூபா பணத்தினை இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார். 

அவருடைய பதிவில், “என்னுடைய அம்மாவிற்கு வீடு கட்டுவதற்காக இந்த பணத்தை சேமித்தேன். வீட்டினை பிறகு கட்டிக்கொள்ளலாம். இது எனது உதவி அல்ல, என்னுடைய கடமை” என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நேற்றையதினம்  திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்காக கையளித்திருந்தமை வரவேற்பை பெற்றிருந்தது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.