நாடாளுமன்றில் நாய் என்ற வார்த்தையை பிரயோகித்த அர்ச்சுனா எம்.பிக்கும் சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சபாநாயருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அன்சாட்டில் இருந்து குறித்த வசனத்தை நீக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஒதுக்கீட்டு சட்டமூலம் 2026-குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது அர்ச்சுனா இராமநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
எனக்கு தெரிந்த சிங்களம்
தொடர்ந்து அவரின் உரையில் குறிப்பிட்டுள்ளதாவது,”எனக்கு தெரிந்த வசனத்தை தான் பாவித்தேன் முடிந்தால் அன்சாட்டில் இருந்து எடுக்கவும்.எனக்கு தெரிந்த சிங்களத்தில் கதைத்தேன்.ஏன் நான் சிங்களத்தில் கதைப்பது உங்களுக்கு பிரச்சினையா? எப்போதும் நான் பேசும் போது நீங்கள் தடங்கள் செய்கிறீர்கள்.நாய்க்கு நாய் என்று தான் சொல்ல முடியும்.
அரசாங்கத்தில் வழங்கும் கெப் வாகனம் எனக்கு தேவையில்லை.அந்த வாகனத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
என்னை வெள்ளத்தில் காப்பற்றியவர் ஒரு சிங்களவர்.
எனது கெப் வாகனத்தின் பணத்தை 10 இலட்சம் ரூபா வீதம் பொருந்தோட்ட மக்களுக்கு வழங்குவது என்றால் நான் அதற்கான அனைத்து விடயங்களையும் செய்வேன்.
எனக்கு இப்போது எந்த வாகனமும் இல்லை.இன்று பேருந்தில் தான் யாழ்ப்பாணம் செல்வேன்.நீங்கள் யாரும் பேருந்தில் செல்வீர்களா?வெட்கப்பட வேண்டும் என்றார்.

