2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன.
எதிரான வாக்கு
மேலும், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 1 வாக்கு மாத்திரமே பதிவாகியிருந்தது.

வாக்களிப்பு நேரத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இந்த நிலையில், 157 மேலதிக வாக்குகளால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

