முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச சேவை செயலிழந்துவிட்டதாக சிலர் கூறத் தொடங்கினர்.

அரச அதிகாரிகள்

அரச அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்று கூறத் தொடங்கினர் இவை பொய்கள்.

இந்தப் பணியில் நல்லெண்ணத்துடன் தலையிட்ட ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பாதுகாப்போம் என்று இந்த நேரத்தில் நான் தெரிவிக்கிறேன்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

நாங்கள் ஒரு தளர்வான அதிகாரத்தை வழங்கினோம், இலங்கையில் முதல் முறையாக ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது.

ஒரு மாவட்ட செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது.

செலவிட அதிகாரம் 

ஒரு அமைச்சின் செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது ஏனென்றால் நாங்கள் இந்த அதிகாரிகளை நம்புகின்றோம்.

இந்த பேரழிவிலிருந்து அவர்கள்
சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

நாங்கள் அவர்களை வலுவாக நம்புகின்றோம், அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளோம்.

பிரதமர் தலைமையிலான குழு 76,000 பேரை அரச பணியில் இணைக்க முடிவு செய்துள்ளது அவர்களில் பன்னிரண்டாயிரம் பேர் பட்டதாரிகள்.

நாங்கள் இப்படி முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அழிவு ஏற்பட்டது, இது எம்மைப் பாதிக்கின்றது.

இயன்றளவு வரி

சிலர், நாங்கள் இயன்றளவு வரி அறவிட்டே இந்த வருமானத்தை ஈட்டியதாகச் சொன்னார்கள் ஆனால் 2024 இல் இருந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியைத் தவிர 2025 ஆம் ஆண்டிற்கு வேறு எந்த மேலதிக வரிகளும் விதிக்கப்படவில்லை.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Government Employees To Get 2025 Salary Increment

சர்வதேச நாணய நிதியம் முந்தைய அரசாங்கத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக 15.2 வீதமாக வழங்கியிருந்தது.

ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேலதிகமாக இதை அடைவதற்காக ஏனைய வரிகள் முன்மொழியப்பட்டன.

டிஜிட்டல் சேவை வரி மற்றும் சொத்து வரி கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்தன ஆனால் 30 வீதமாக நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் சேவை வரியை 15 வீதமாக குறைத்தோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.