முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு: அரசாங்கத்தின் அறிவிப்பு

விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1 50 000 உதவித்தொகை வழங்கப்படும்.

நெல் வயல்

இந்த நெல் வயல்களை மீண்டும் பயிரிடுவதே எமது எதிர்பார்ப்பு, சுமார் 1 60 000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு மாதத்திற்கும் குறைவான பயிருக்கு ஹெக்டெயாருக்கு 40000 மட்டுமே வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு: அரசாங்கத்தின் அறிவிப்பு | Government Relief Allowance Flood Affected Farmers

இந்த 1 60 000 ஹெக்டெயார்களையும் மீண்டும் பயிரிட முடிவு செய்துள்ளோம் அதற்காக விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவோம்.

அத்தோடு, இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில் நாங்கள் பொதுவாக மரக்கறிகளைப் பற்றி யோசிப்பதில்லை.

கட்டியெழுப்ப நடவடிக்கை 

மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த பணம் இன்று முதல் ஒதுக்கப்படும் ஆனால் எங்கள் அமைச்சின் அதிகாரிகள் மீண்டும் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு: அரசாங்கத்தின் அறிவிப்பு | Government Relief Allowance Flood Affected Farmers

இந்த வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு “ஐயோ கடவுளே” என்று கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு நாம் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

மாறாக இந்த நாடு வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ப்புப் பண்ணை

அதற்கு விவசாயம்தான் முக்கிய காரணம் எனவே விவசாயிகள் மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அதற்காக அவர்களைத் தயார்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம், பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடை வளர்ப்புப் பண்ணையையும் மீண்டும் தொடங்க தலா ரூபாய் இரண்டு இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு: அரசாங்கத்தின் அறிவிப்பு | Government Relief Allowance Flood Affected Farmers

மேலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமும் அது சிறியதாக இருந்தாலும் சரி நடுத்தரமாக இருந்தாலும் சரி பாரியதாக இருந்தாலும் சரி தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூபாய் 200 000 உதவித்தொகை வழங்கப்படும்.

கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் எந்த அர்த்தமும் இல்லை இவற்றை நாம் மீளமைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.