திருகோணமலையில் வெருகல் பிரதேசத்திலுள்ள உப்புரல் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளரும் சேர்ந்து குறித்த நிவாரண நடவடிக்கை உதவி செய்துள்ளார்.
இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படும் நடவடிக்கைகள் இரவு நேரத்திலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.






