டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட காப்புறுதி செய்யப்பட்ட அபாயங்கள் தொடர்பான
உரிமைகோரல்களுக்கான கொடுப்பனவுகளை விரைவுபடுத்த காப்புறுதி நிறுவனங்கள்
ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (IRCSL)
தெரிவித்துள்ளது.
டிசம்பர் 3 ஆம் திகதியன்று நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன
சூரியப்பெரும மற்றும் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி அஜித் ரவீந்திர டி மெல்
உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தைத் தொடர்ந்து இந்த
முடிவு எட்டப்பட்டுள்ளது.
உரிமைகோரல் தீர்வுகள்
பாதிக்கப்பட்ட காப்புறுதிதாரர்களுக்குச் சரியான நேரத்தில் நிவாரணம் கிடைப்பதை
உறுதி செய்வதற்காக, உரிமைகோரல் தீர்வுகளை விரைவுபடுத்துவதாகவும், நிர்வாகத்
தாமதங்களை நீக்குவதாகவும் காப்புறுதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

காப்புறுதித் தீர்வுச் செயன்முறையை ஆணைக்குழு நெருக்கமாகக் கண்காணித்து
வருவதாகவும் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தங்கள் நிறுவனங்களைத் தொடர்புகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும்
காப்புறுதிதாரர்கள் உதவிக்காக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை
077 241 8511 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

