தலவதுகொடையில் உள்ள ஒரு புடைவைக்கடை உரிமையாளர் , பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் கமராவை மறைத்து வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தலங்கம காவல்துறையின் தகவலின்படி,இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 8) கடையின் உடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட கமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து புடைவைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
201 காணொளிகள் கண்டுபிடிப்பு
சந்தேக நபருக்கு சொந்தமான ஒரு கைபேசி ஆய்வு செய்யப்பட்டது,அதில் அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடை மாற்றும் காணொளிகள் மற்றும் ஒரு வீட்டில் குளியலறையில் ஒரு பெண் குளிக்கும் தனி காணொளி ஆகியவை காட்சிகளில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதா
காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதா அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விசாரணைக்காக கமரா மற்றும் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

